ஜனாதிபதி மக்ரோன் இன்று கீவ் நகருக்கு அவசர பயணம்!!

10 வைகாசி 2025 சனி 07:00 | பார்வைகள் : 8533
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று மே 10, சனிக்கிழமை யுக்ரேனின் கீவ் நகருக்க் அவசர பயணம் ஒன்றை மேற்கொள்கிறார்.
ரஷ்ய-யுக்ரேன் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து மக்ரோன் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். மக்ரோனுடன், ஜெர்மனியின் புதிய சான்சிலர் Friedrich Merz, போலந்து பிரதமர் டொனல்ட் டஸ்க் மற்றும் பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டாமரும் உடன் பயணிக்கின்றனர்.
கீவ் நகரில் வைத்து யுக்ரேன் ஜனாதிபதி விளாதிமிர் செலன்ஸ்கியை நால்வரும் சந்திக்க உள்ளனர். யுக்ரேனின் 30 நாட்கள் போர்நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது.
“அமெரிக்காவுடன் இணைந்து நிலையான - நீடித்த மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தம் ஒன்றை யுக்ரேனில் ஏற்படுத்துவது கட்டாயமானதாகும்” என ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார்.