ஜூன் மாதத்திலும் தொடரும் வேலை நிறுத்தம்!!

9 வைகாசி 2025 வெள்ளி 20:22 | பார்வைகள் : 666
தற்போது இடம்பெற்று வரும் தொடருந்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், வரும் ஜூன் மாதத்திலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 4, 5, மற்றும் 11 ஆம் திகதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஊழியர்களை CGT-Cheminots தொழிற்சங்கம் அழைத்துள்ளது. ஊதிய உயர்வுகோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களின் வேலை நிறுத்தத்தினால் பொது போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும், இதில் கலந்துகொள்ள SUD-Rail தொழிற்சங்கத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது மே 4 ஆரம்பித்த வேலை நிறுத்தம் இன்று 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளாக தொடர்கிறது. மேலும் 10, 11 ஆகிய வார இறுதி நாட்களிலும் வேலை நிறுத்தம் தொடர உள்ளது.