Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவின் சூப்பர்சோனிக் விமானம் ஒன்று விபத்து

ரஷ்யாவின் சூப்பர்சோனிக் விமானம் ஒன்று விபத்து

15 சித்திரை 2025 செவ்வாய் 14:12 | பார்வைகள் : 2930


அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடிய ரஷ்யாவின் Tu-22M3 சூப்பர்சோனிக் விமானம் ஒன்று விபத்தில் சிக்கி நெருப்பு கோளமாக வெடித்துச் சிதறியுள்ளது.

சுமார் 228 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான அந்த விமானம், உக்ரைன் மீது வெடிகுண்டுகளை வீசப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மணிக்கு 2,300 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடிய இந்த விமானத்தில் 24 டன் வரையிலான ஏவுகணைகளை எடுத்துச் செல்லலாம்.

விபத்து தொடர்பில் Irkutsk பிராந்தியத்தின் ஆளுநர் Igor Kobzev உறுதி செய்துள்ளார்.

விமானி உட்பட நால்வர் பயணிக்கக் கூடிய இந்த விமானம் விபத்தில் சிக்கிய நிலையில், விமானி ஒருவர் கொல்லப்பட்டதாகவும், எஞ்சியவர்கள் உயிர் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் மின் தடை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. Tu-22M3 சூப்பர்சோனிக் விமானமானது உக்ரைன் போரின் போதே முதல் முறையாக ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Tu-22M3 ரக விமானமானது விபத்தில் சிக்குவது இது முதல் முறையல்லை. ஒருமுறை உக்ரைன் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. உக்ரைன் எல்லையில் இருந்து 250 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள Stavropol பிராந்தியத்தில் விழுந்து நொறுங்கியது.

குண்டுவீச்சு விமானமானது S-200 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனிடையே, விளாடிமிர் புடின் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவார் என தாம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆனால் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா முட்டுக்கட்டை இடுவதாக உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி வருகிறது.

அமெரிக்கா முன்வைக்கும் ஒப்பந்தங்கலுக்கு உக்ரைன் ஒப்புதல் அளித்தாலும், ரஷ்யா புதிய நிபந்தனைகளை முன்வைத்து, போர் நிறுத்த நடவடிக்கைகளை தாமதப்படுத்தி வருகிறது.

 

5 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்