பெரு நட்டத்தில் பிரான்ஸ் - மக்ரோன் அரசின் சாதனை!

15 சித்திரை 2025 செவ்வாய் 11:23 | பார்வைகள் : 1618
பிரான்ஸ் பெரும் நட்டமான நிலையில் உள்ளது. ஐரொப்பாவிலேயே அதியுச்ச நட்டத்தில் பிரான்ஸ் உள்ளது. பிரான்ஸ் நாற்பது பில்லியன் (நாற்பதாயிரம் மில்லியன்) யூரோக்கள் பற்றாக்குறையில் உள்ளது. இது மொத்த உள்ளக உற்பத்தியின் (PIB) 4.6 சதவீதத்திற்கும் அதிகமானது என பிரான்சின் பிரதமர் பிரோன்சுவா பய்ரூ தெரிவித்துள்ளார்.
இன்று நிதியமைச்சர் மற்றும் அவரது செயலாளர்களுடன் பூட்டிய அறைக்குள் விவாதம் செய்ய உள்ளார்.
எமானுவல் மக்ரோனின் இரண்டாவது ஆட்சிக்காலம் முடிய நெருங்கும் நிலையில் பிரான்சினை அதல பாதாளத்திற்குள் தள்ளி உள்ளார்.
அத்தனை சுமைகளும் மக்களின் தலையில் வீழந்துள்ளது.
இந்த நாற்பது பில்லியனை ஒதுக்குவதற்கு 2025 இல் செய்தததை விட பொது உதவிளில் மேலும் சிக்கனத்தை 2026 இல் செய்யவேண்டும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தேவையற்று உக்ரைன் போரில் பெரும் செலவீனத்தைச் செய்த மக்ரோன் அரசாங்கம், பிரான்சில் தன் மக்களைப் படடினி போடத் தயாராகிக் கொண்டு வருகின்றது.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும மேலும் அதிகரித்தே செல்கின்றது.