பணவீக்கம் : பொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

15 சித்திரை 2025 செவ்வாய் 11:00 | பார்வைகள் : 1166
பிரான்சில் உணவு மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. நிலையற்ற பொருளாதாரம் நிலவுவதால் பொருகளின் விலைகளில் மாதம் தோறும் மாற்றம் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வருட மார்ச் மாதத்தில் பொருட்களின் விலை 0.8% சதவீதத்தால் அதிகரித்துள்ளன. இவற்றில் உணவுப்பொருட்களின் விலை 0.3% சதவீதத்தாலும், ஆடை, காலணிகளின் விலை 5.7% சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன. இதில் மகிழ்ச்சியான செய்தியாக எரிபொருட்களின் விலை மாத்திரம் மார்ச் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளன.
சென்ற பெப்ரவரியில் 0.3% சதவீதத்தால் அதிகரித்திருந்த நிலையில், மீண்டும் பொருட்கள் விலையேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி தகவல்களை INSEE நிறுவனம் வெளியிட்டுள்ளன.