இடி மின்னல் தாக்குதல், மழை, புயல் - 31 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

15 சித்திரை 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 1470
இன்று ஏப்ரல் 15, செவ்வாய்க்கிழமை, இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் புயல் காற்று காரணமாக நாட்டின் 31 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடி மின்னல் மழை!!
Ain, Allier, Alpes-Maritime, Ardèche , Aube, Aveyron, Bouches-du-Rhône, Cantal, Côte-d'Or, Doubs, Drôme, Gard, Hérault, Isère, Jura, Loire, Haute-Loire, Lozère, Haute-Marne, Nord, Pas-de-Calais, Puy-de-Dôme, Pyrénées-Orientales, Haut-Rhin, Rhône, Haute-Saône, Saône-et-Loire, Var, Vaucluse, Vosges, Territoire de Belfort மற்றும் Andorra ஆகிய 31 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை அங்கு 15 தொடக்கம் 30 மி.மீ வரை மழை பதிவாகும் எனவும், சில இடங்களில் 50 மில்லி மீற்றர் வரை மழை பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல்!!
அதேவேளை, Calvados , Côtes-d'Armor, Finistère, Ille-et-Vilaine, Loire-Atlantique, Manche, Morbihan மற்றும் Vendée அகிய எட்டு மாவட்டங்களில் வேகமாக காற்று வீடும் எனவும், மணிக்கு 70 தொடக்கம் 90 கி.மீ வேகம் வரை காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.