Paristamil Navigation Paristamil advert login

கானாமற்போன ஓட்ட வீராங்கனை - புதிய திருப்பம்!!

கானாமற்போன ஓட்ட வீராங்கனை - புதிய திருப்பம்!!

14 சித்திரை 2025 திங்கள் 20:44 | பார்வைகள் : 4088


கடந்த 10ம் திகதி பயிற்சி ஓட்டத்தின் போது காணாமற்போன அகாதே ஹிலாரே பற்றி ஏற்கனவே பார்த்திருந்தோம். ஜோந்தார்மினர் தொடர்ந்தும் தேடுதல் நடாத்தி வருகின்றனர்.

எந்தத் தகவல்களும் கிடைக்காத நிலையில் தற்போது, «கடத்தல் மற்றும் அடைத்து வைத்தல்» (enlèvement et séquestration) என்ற நோக்கில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் மேலதிகமாக பெரும் படையினர் தேடுதல் வேட்டைக்கும் விசாரணைக்கும் இணைக்கப்பட்டுள்ளனர்.

மரபணு மூலம் அடையாளம் காணும் தொழில்நுட்பப் படையினரும் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம், தடயங்கள் துல்லியமாகத் தேடப்பட உள்ளன என மாவட்ட ஆளுநர் தெரிவித்துள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்