Paristamil Navigation Paristamil advert login

தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து எங்கே; முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து எங்கே; முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

15 சித்திரை 2025 செவ்வாய் 06:00 | பார்வைகள் : 569


கலாசார கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்துக் கூற மனம் இல்லையா என்று, தமிழக முதல்வருக்கு பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மொழியின் காவலன் நான் என வீராப்பு காட்டும் ஸ்டாலின், நண்பகல் கடந்தும் தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறாமல் அவர்களை புறக்கணித்து வருகிறார்.

மேலும், இந்த ஆண்டும் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனத்தின் ஆவின் பால் பாக்கெட்டுகளில் புத்தாண்டு வாழ்த்துகள் பதிவிடப்படவில்லை.

ஆங்கில புத்தாண்டிற்கு அகிலத்திற்கெல்லாம் வாழ்த்துமடல் எழுதும் முதல்வருக்கு, ஆண்டாண்டு காலமாக தமிழர்களின் கலாசாரக் கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்து கூற மனமில்லையா?

தமிழுக்காக உயிரைக் கொடுக்கும் கழகம் தி.மு.க., என விளம்பர வசனம் பேசிக் கொண்டு நமது தாய்த் தமிழை வெறும் அரசியல் பிழைப்பு மொழியாக மட்டுமே தி.மு.க., பயன்படுத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்-

தொடர்ந்து தமிழர்களின் மத, கலாசார நம்பிக்கைகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் திமுகவிற்கு ஓட்டுச்சாவடிகளில் சவுக்கடி கிடைக்கப் போவது நிச்சயம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்