இலங்கையில் தந்தையின் லொறியில் சிக்கி குழந்தை பலி

14 சித்திரை 2025 திங்கள் 08:40 | பார்வைகள் : 1037
பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருக்மல்கந்துர பகுதியில் லொறியின் இடது பின்பக்கச் சக்கரத்தின் கீழ் சிக்கி ஒரு வயது ஏழு மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது.
வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியை குழந்தையின் தந்தை பின்னோக்கி இயக்கிய போது, இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குழந்தை பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய 39 வயதான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.