பல்கலை துணைவேந்தர்களுடன் 16ல் முதல்வர் ஆலோசனை

14 சித்திரை 2025 திங்கள் 06:02 | பார்வைகள் : 652
உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனை கூட்டம், வரும், 16ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலை துணைவேந்தர்களை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரம் உட்பட, பல்கலைகள் தொடர்பாக கவர்னரிடம் இருந்த அதிகாரங்களை, தமிழக அரசுக்கு மாற்றம் செய்யும், 10 சட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில், சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
பத்து சட்ட மசோதாக்களும், சட்டமாக்கப்பட்டு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தலைமை செயலகத்தில், வரும், 16ம் தேதி மாலை, தமிழகத்தில் உயர் கல்வியை மேம்படுத்துவதற்காக, அனைத்து பல்கலைகளின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனை கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக, தலைமை செயலகத்தில், முதல்வர் தலைமையில், துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.