Épinay-sous-Sénart: குடும்ப தகராறு; தாய் ஹெலிகாப்டரில் மருத்துவமனை அனுமதி!!

13 சித்திரை 2025 ஞாயிறு 22:06 | பார்வைகள் : 4652
Épinay-sous-Sénart என்ற இடத்தில், 60 வயதுடைய மூதாட்டி தனது 47 வயதான மகனுடன் ஏற்பட்ட தகராறில் ஏப்ரல் 12 ஆம் தேதி காலை 9:30 மணியளவில் படு காயமடைந்தார். அவர்கள் வசிக்கும் வீட்டில் ஏற்பட்ட வாதத்தின் போது, அந்த பெண் மேசையில் விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவ குழுவினர் அவருக்கு முதல் உதவி செய்து, Percy de Clamart (Hauts-de-Seine) மருத்துவமனைக்கு ஹெலிகாப்டரில் கொண்டு சென்றனர். அதே நேரத்தில், போலீசார் சம்பவ இடத்தை பரிசோதனை செய்தனர்.
அந்த பெண்ணின் மகன் தப்பி ஓடியிருந்தாலும், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு Brunoy இல் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. "violences sur ascendant" (ஆதிக்கத்துக்கு எதிரான வன்முறை) வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1