உக்ரைன் நகரத்தின் மீது ரஸ்யா ஏவுகணை தாக்குதல் -31 பேர் பலி

13 சித்திரை 2025 ஞாயிறு 17:56 | பார்வைகள் : 705
உக்ரைனின் சுமி நகரத்தின் மீது ரஸ்யா மேற்கொண்ட கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணை தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைனின் அவசர சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பத்து சிறுவர்கள் உட்பட 81 பேர் காயமடைந்துள்ளனர் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.