டிரம்பின் பின்வாங்கலை "வெற்றியாக கொண்டாட வேண்டாம்": பொருளாதர அமைச்சர் Eric Lombard !!

13 சித்திரை 2025 ஞாயிறு 13:38 | பார்வைகள் : 2011
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விதித்த இறக்குமதி வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்தியது குறித்து, பிரான்சின் பொருளாதார அமைச்சர் எரிக் லொம்பார்ட் முக்கியமான கருத்து தெரிவித்துள்ளார்.
"இது வெற்றி என்று ஐரோப்பா மனதளவில் நினைத்துவிடக்கூடாது" என எச்சரித்து உள்ளார். "டொனால்ட் டிரம்ப் வரி உயர்வைத் தற்காலிகமாக நீக்கியிருப்பதும், சில வரிகள் தொடர்ந்து அமுலில் இருக்கும் நிலையிலும், இதை வெற்றியாக பார்க்காமல் பேச்சுவார்த்தைக்கான ஒரு வாய்ப்பாகத்தான் பார்க்க வேண்டும்" எனவும் Eric Lombard கூறியுள்ளார்.
மேலும், ஐரோப்பா அமெரிக்காவிற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் அதேவேளை ஐரோப்பாவில் முதலீடு செய்யும்படி நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.
"சீனாவின் பொருட்கள் ஐரோப்பிய சந்தையை நோக்கி அதிகமாக வரக்கூடும் என்பதால், அவை தேவைக்கு அதிகமாக வருவதை தடுக்கும் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" என எரிக் லொம்பார்ட் எச்சரித்துள்ளார்.
தற்போதைய நிலைபாடில் மாற்றங்கள் தேவைப்படுவதால், தென் அமெரிக்க நாடான Mercosur உடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடத் தயார் என்றும், மேலும் உணவுப் பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழலின் தரங்களை அதிகரிக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.