கடலில் தத்தளித்த 50 அகதிகள் மீட்பு!!

13 சித்திரை 2025 ஞாயிறு 11:44 | பார்வைகள் : 1698
Pas-de-Calais கடற்பிராந்தியம் வழியாக பிரித்தானியா செல்ல முற்பட்ட அகதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
ஏப்ரல் 12, நேற்று சனிக்கிழமை இரவு பா-து-கலே கடல்பகுதி வழியாக 50 அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று பயணித்துள்ளது. அவர்களது படகு நடுக்கடலில் வைத்து பழுதடைந்துள்ளது. பின்னர் அவர்கள் கடற்படையினரை உதவிக்கு அழைத்துள்ளனர். அதை அடுத்து அவர்களை centre régional opérationnel de surveillance et de sauvetage (CROSS) அதிகாரிகள் மீட்டனர்.
இந்த ஏப்ரல் மாதத்தில் அதிகளவு கடற்பயணங்கள் பதிவாகியுள்ளதாகவும், ஏப்ரலில் மட்டும் ஆயிரத்துக்கு அதிகமாக அகதிகளை கடற்படையினர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.