தொடரும் யூத எதிர்ப்புத் தாக்குதல்கள்!

13 சித்திரை 2025 ஞாயிறு 11:35 | பார்வைகள் : 951
பிரான்சில் தொடர்ச்சியாக யூத எதிர்ப்புவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
முக்;கியமாக லியோன் நகரில் இந்த மாதத்திற்குள் மட்டும் நேற்றைய தாக்குதல் மூன்றாவது தாக்குதலாகும்.
கழுத்தில் தாவீது நட்சத்திரம் அணிந்த சங்கிலி போட்டிருந்தால் ஒருவர் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் லியோனின் புறநகரமான Villeurbanne இல் நடந்துள்ளது.
இவர் தாக்கப்பட்டு, 'கேலமான யூதன்' எனச் சொல்லி அடிக்கப்பட்டுளளார். இதை மற்றைய ஒருவர் காணொளியில் பதிவு செய்துள்ளார். தாக்கப்பட்ட நபர் காயங்களிற்கு உள்ளாகி உள்ளார்.
பிரான்சின் தேசியக் காவற்துறை இப்படியான தாக்குதல்களைத் தடுக்க பெரும் முயற்சி எடுத்து வருகின்றது.
முக்கியமாக லியோன் காவற்துறையினர், இந்தக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.