இலங்கை மக்களுக்கு புத்தாண்டு கால விபத்துகள் குறித்து அறிவுறுத்தல்

13 சித்திரை 2025 ஞாயிறு 11:29 | பார்வைகள் : 954
புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், பட்டாசுக்களை வெடிக்கும் போது தீக்காயங்கள் ஏற்படக்கூடும் என்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புத்தாண்டு காலங்களில் சிறுவர்கள் விபத்துக்கு உள்ளாவதை தவிர்ப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.