ஐந்து குண்டுகள் துளைத்துப் படுகொலை!!

13 சித்திரை 2025 ஞாயிறு 10:23 | பார்வைகள் : 1017
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவிற்கும் நேற்றுச் சனிழக்கிழமை அதிகாலைக்கும் இடையில், சிற்றுந்துருளியில் (Scooter) வந்த இருவர், ஒரு நபர் மீது சரமாரியாகச் சுட்டதில், ஐந்து குண்டுகள் துளைக்கப்பட்டு அந்த நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் நீஸ் நகரத்தில் உள்ள பஸ்தர் குடியிருப்புப் பகுதியில் நடந்துள்ளது எனவும், கொல்லப்பட்ட 28 வயதுடையவரிற்கும், கொலையாளிகளிற்கும் இடையில் போதைப்பொருள் விவகாரம் இருந்துள்ளது எனவும், இது பழிவாங்கற் படுகொலை எனவும், நீசின் தலைமை மாவட்ட ஆளுநர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டத் தகவல்களின் படி, 9மில்லிமீற்றர் குண்டுகளே நெஞ்சிலும் தொண்டையிலும் பாய்ந்தமையால் இவர் கொல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விசாரணை, திட்டமிட்ட கொலை மற்றும் குழு நடவடிக்கைத் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் வழங்கப்பட்டுள்ளது.