முறுகும் பிரான்ஸ் - அல்ஜீரியா இராஜதந்திர உறவு!!

13 சித்திரை 2025 ஞாயிறு 09:57 | பார்வைகள் : 1821
பிரான்சில் வசித்து வந்த அல்ஜீரிய அரசாங்கத்திற்கெதிரான கருத்துக்களைத் தெரிவித்து வந்த அமீர் புக்கோர்ஸ் (Amir Boukhors) எனும் யூரியுப் பிரபலம் 2024ம் ஆண்டு பிரான்சில் காணாமற்போயிருந்தார். இவர் மிகவும் பிரபலமாக «Amir DZ» எனவும் அழைக்கப்பட்டு வந்தர்.
இவர் கைது செய்யப்படடதைத் தொடர்ந்து அல்ஜீரிய பிரான்சைக் கடுமையாக எச்சரித்துள்ளது.
ஒரு தூதரக அதிகாரி பொது இடத்தில் வைத்தக் கைது செய்யப்பட்டது இராஜரீக வழியில் தங்களிற்கு அறிவிக்கப்படவில்லை எனவும், இவர் உடனடியாக விடுவிக்கப்படாவிட்டால் பிரான்ஸ் - அல்ஜீரிய உறவில் பாரிய விசரில் ஏற்படும் எனவும் அல்ஜீரியா எச்சரித்துள்ளது.
ஆனால் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே தூதரக அதிகரி கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், பயங்கரவாதச் செயலில் தொடர்பு உள்ளது எனவும், அவரிற்கான தண்டனை உறுதி எனவும், பிரான்சின் உள்துறை அமைச்சர் இதற்குப் பதிலளித்துள்ளார்.
பெரும் முறுகல் நிலை இராஜதந்திர ரீதியில் ஏற்பட்டுள்ளது.