பரிஸ் மரதோன் - இரண்டாவடது தடவையாக வெற்றிவாகை சூடிய Bernard Biwott !!

13 சித்திரை 2025 ஞாயிறு 09:22 | பார்வைகள் : 1496
பரிஸ் மரதோன் போட்டி இன்று ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. இதில் இரண்டாவது தடவையாக கென்யாவைச் சேர்ந்த Bernard Biwott என்பவர் வெற்றி பெற்றார்.
23 வயதுடைய அவர் 23 கிலோமீற்றர் தூரத்தை 2 மணிநேரங்கள் 5 நிமிடங்கள் 25 விநாடிகளில் நிறைவு செய்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.
பெண்களில் எதியோப்பியாவைச் சேர்ந்த Bedatu Hirpa என்பவர் வெற்றி பெற்றார். அவர் இரண்டு மணிநேரம் 6 நிமிடங்கள் 13 விநாடிகளில் வெற்றிக்கோட்டை எட்டிப்பிடித்தார். இதுவரையான மரதோன் பெண்கள் பிரிவில் அவர் மிக குறைந்த நேரத்தில் எல்லைக்கோட்டை எட்டியுள்ளார். முன்னைய சாதனையாக 2 மணிநேரம்19 நிமிடம் 48 விநாடிகளாகும்.
அதேவேளை, ஆண்கள் பிரிவில் சாதனையாக 2 மணிநேரம் 04 நிமிடம் 21 விநாடிகளாகும். அதனை Bernard Biwott தவறவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.