Paristamil Navigation Paristamil advert login

இலங்கை வந்த பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இலங்கை வந்த பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

12 சித்திரை 2025 சனி 11:27 | பார்வைகள் : 1288


28 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் சவூதியிலிருந்து இலங்கை வந்த இரு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு சவூதியின் ஜெத்தாவிலிருந்து டுபாய்க்கு வருகைதந்து அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரும் குருணாகல் பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 35 வயதுடைய இரு பெண்கள் ஆவர்.

இருவரும் தங்கள் உடலில் 932 கிராம் எடையுள்ள தங்க நெக்லஸ்கள் மற்றும் வளையல்களை அணிந்திருந்ததுடன் வியாபார நோக்கத்திற்காக கொண்டுவந்ததாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதுடன், தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்