விஜய் சேதுபதியுடன் இணையும் இயக்குனர் யார் தெரியுமா?
12 சித்திரை 2025 சனி 10:54 | பார்வைகள் : 5708
இரண்டு ஹீரோ கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும், அவருடன் இன்னொரு பிரபல நடிகரும் நடிக்க இருப்பதாகவும், சமீபத்தில் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் திரை உலகில் "மக்கள் செல்வன்" என்று அன்புடன் அழைக்கப்படும் விஜய் சேதுபதி, ஏற்கனவே ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஏஸ்’ மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ’ட்ரெயின்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஒரு படத்திலும், இன்னொரு படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்த நிலையில், தற்போது அவர் இரண்டு ஹீரோக்களை கொண்ட கதையம்சம் கொண்ட ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும், சமீபத்தில் ’கருடன்’ என்ற வெற்றிப்படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
’எதிர்நீச்சல்’, ’காக்கி சட்டை’, ’கொடி’, ’பட்டாஸ்’ போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், சமீபத்தில் சூரி, சசிகுமார் நடித்த ’கருடன்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியுள்ளார். தற்போது, லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி வரும் ஒரு படத்தையும் அவர் இயக்கி வருகிறார். இந்தப் படம் முடிந்தவுடன், விஜய் சேதுபதி படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விஜய் சேதுபதியுடன் இணைந்து மற்றொரு நாயகனாக சசிகுமார் நடிக்க இருப்பதாகவும், இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan