Paristamil Navigation Paristamil advert login

சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க நாடு முழுவதும் முப்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆர்பாட்டம்!

சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க நாடு முழுவதும் முப்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆர்பாட்டம்!

12 சித்திரை 2025 சனி 09:10 | பார்வைகள் : 1714


முப்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள், 2025 ஏப்ரல் 12-ஆம் தேதி, பரிஸ் - place de la République இல் மாலை 5 மணிக்கும் மற்றும் பிரான்சின் அனைத்து நகரங்களிலும் சட்ட ஆட்சியை (État de droit) காக்கும் நோக்கில் ஒன்று கூட அழைத்துள்ளன. 

SOS Racisme, Ligue des droits de l’Homme, Oxfam, Greenpeace, CGT போன்ற அமைப்புகள் இதில் பங்கேற்கின்றன. இந்த அழைப்பு, மரின் லு பென்—மீது விதிக்கப்பட்ட தண்டனையைத் தொடர்ந்து நீதிமன்றம் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் ஜனநாயகத்தையும் நீதியையும் மீண்டும் வலியுறுத்தும் வகையில் குடியுரிமை அமைப்புகள் இந்த ஒன்று கூடலை ஏற்பாடு செய்துள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்