சைபர் தாக்குதல் மற்றும் உளவு முயற்சிகள் அதிகரிப்பு: கவலையில் பிரான்ஸ் அரசு!

11 சித்திரை 2025 வெள்ளி 15:39 | பார்வைகள் : 3982
2024-ஆம் ஆண்டில் இருந்து பிரான்சில் தாக்குதல்களும், உளவு முயற்சிகளும் கணிசமாக அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் ராணுவத் புலனாய்வுத்துறை துறையின் (DRSD)அறிவிப்பின்படி, உடல் தாக்குதல்கள், விபரங்கள் திருட்டு, அனுமதி அற்ற நுழைவுகள், உளவு நடவடிக்கைகள் போன்றவை 50% ஆக அதிகரித்துள்ளன. சைபர் தாக்குதல்கள் 60% ஆக உயர்ந்துள்ளன. இது நூற்றுக்கணக்கான சம்பவங்களை உள்ளடக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
DRSD-யின் தலைவர் ஜெனரல் பிலிப் சுஸ்ன்யரா (général Philippe Susnjara) “அபாய நிலை மிக உயர்ந்துள்ளது, மேலும் சில துறைகளில் இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது” எனக் கூறினார். "விமானவியல், விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப துறைகள்" உளவு நடவடிக்கைகளின் இலக்காக உள்ளன என கூறி உள்ளார்.
மேலும் "ஆழக் கடல் ஆராய்ச்சி போன்ற துறைகளும் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன", எனவும் DRSD-யின் தலைவர் ஜெனரல் பிலிப் சுஸ்ன்யரா கூறி உள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025