அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி: அமித்ஷா பேட்டி
12 சித்திரை 2025 சனி 06:00 | பார்வைகள் : 4760
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் கூட்டணி அமைத்து சந்திக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அமித்ஷா, இ.பி.எஸ்., அண்ணாமலை ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது அமித் ஷா பேசியதாவது;
அனைவருக்கும் பங்குனி உத்தர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ஜ, தலைவர்களும், அ.தி.மு.க., தலைவர்களும் ஒன்றாக இணைந்து கூட்டணியை உருவாக்கி உள்ளார்கள். அடுத்து வரும் தேர்தலை தே.ஜ., கூட்டணியுடன் இணைந்து சந்திப்போம்.
இந்தத் தேர்தலை தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழகத்தில் இ.பி.எஸ்., தலைமையிலும் சந்திப்போம்.
1998 ம் ஆண்டு முதல் பா.ஜ.,வும் அ.தி.மு.க.,வும் தொடர்ந்து கூட்டணி அமைத்து வருகிறது. இது இயல்பான கூட்டணி. ஜெயலலிதா காலம் முதல் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 30 இடங்களில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்று உள்ளது.
வரும் தேர்தலில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan