காசாவில் பயங்கரவாதிகளின் சுரங்கம், கட்டிடங்களை தகர்த்திய இஸ்ரேல்

11 சித்திரை 2025 வெள்ளி 03:36 | பார்வைகள் : 2484
காசா மீது நள்ளிரவு மற்றும் காலையில் என தொடர்ச்சியாக இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்ட தீவிர தாக்குதலில், கடந்த 24 மணிநேரத்தில் 35 கட்டிடங்கள் மற்றும் சுரங்கங்கள் தகர்க்கப்பட்டன என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, எங்களுடைய விமான படை காசா முனை பகுதியில் தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
பயங்கரவாதிகளின் உட்கட்டமைப்புகளை தகர்ப்பதுடன், பயங்கரவாதிகளையும் தாக்கி அழித்து வருகிறது.
ரபா மற்றும் மொராஜ் பகுதியில் படைகள் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளன. அந்த பகுதிகளை எங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர தொடர்ந்து செயல்படுவோம் என்றார்.
அந்த பகுதியில், நேரடி அச்சுறுத்தலாக இருந்த கண்காணிப்பு நிலைகள், பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் உட்கட்டமைப்புகள் ஆகிய இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டன என்றார்.
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஓராண்டாக இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில், பரஸ்பரம் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். எனினும், 2-வது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படாத சூழலில், திடீரென இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட தொடங்கியது.
பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம் என இஸ்ரேல் கூறுவதுடன், மக்கள் அடர்த்தியான பகுதிகளில் அவர்கள் (ஹமாஸ் அமைப்பினர்) செயல்படுகின்றனர் என்றும் அதனால், பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் குற்றச்சாட்டாக கூறியது. தாக்குதலையும் தீவிரப்படுத்தி வருகிறது.