Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனிற்கு எதிராக 155 சீனர்கள் ரஸ்யாவுடன் இணைந்து போரிடுகின்றனர் - உக்ரைன் ஜனாதிபதி

உக்ரைனிற்கு எதிராக 155 சீனர்கள் ரஸ்யாவுடன் இணைந்து போரிடுகின்றனர் - உக்ரைன் ஜனாதிபதி

10 சித்திரை 2025 வியாழன் 15:26 | பார்வைகள் : 1720


உக்ரைனிற்கு எதிராக 155 சீனர்கள் ரஸ்யாவுடன் இணைந்து போரிடுகின்றனர் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி  தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவுடன் இணைந்து போரிடும் சீனர்களின் கடவுச்சீட்டு விபரங்கள் பெயர்கள் என்னிடம் உள்ளன என தெரிவித்துள்ள  உக்ரைன் ஜனாதிபதி சீனாவிற்கு இவர்கள் போரிடுவது நன்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

சீனா விடயம் பாரதூரமானது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சீனா இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளதுடன்,இருவது கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

சீனா அரசாங்கம் தனது பிரஜைகள் போர்க்களங்களை தவிர்க்கவேண்டும்,எந்த வித ஆயுதமோதலிலும் இணைந்துகொள்ளக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளதுஎன சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட இரண்டு சீன இராணுவத்தினரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை காண்பிக்கும் வீடியோவை உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சீனப்பிரஜையொருவர் தான் சரணடைந்தவேளை ரஸ்ய படையினர் எரிவாயு குண்டுகளை தன்மீது வீசியதாகவும் தான் உயிரிழக்கப்போகின்றேன் என அச்சமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட ஒருவர் ரஸ்ய பிரஜாவுரிமை ரஸ்ய படையில் இணைவதற்காக தரகர் ஒருவருக்கு 2700 அமெரிக்க டொலர்களை வழங்கினார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

5 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்