முன்னாள் பிரதமர் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறாரா?

8 சித்திரை 2025 செவ்வாய் 14:58 | பார்வைகள் : 2665
Renaissance கட்சியால் நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட கூட்டத்தை ஏப்ரல் 6 ஞாயிற்றுக்கிழமை செயிண்ட்-டெனிஸ் (Seine-Saint-Denis) நகரில் நடத்தியது. முன்னாள் பிரதமர் கேப்ரியல் அட்டால் (Gabriel Attal) "நீங்கள் திருடினீர்கள், நீங்கள் பணம் செலுத்த வேண்டும்! அதிலும் குறிப்பாக நீங்கள் ஒரு அரசியல் தலைவராக இருக்கும் போது" என்று மரின் லூபனை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
டிசம்பரில் Renaissance கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தனது முதல் பெரிய நிகழ்வை ஏற்பாடு செய்த முன்னாள் பிரதமர், தீவிர வலதுசாரி தலைவர்களான டொனால்ட் டிரம்ப், விளாடிமிர் புடின் மற்றும் விக்டர் ஓர்பன் ஆகியோர் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் குறுக்கீடு செய்ததையும் கண்டித்தார். RN கட்சிக்காரர்கள் டொனால்ட் டிரம்பின் கூட்டாளி அல்ல, அவர்கள் டிரம்பிசத்தின் குழு என்றும் கூறினார்.
மேலும் நீதிமன்றத்தின் முடிவுகளை கேள்விக்குட்படுத்துவதையோ அல்லது நீதிபதிகள் மற்றும் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதையோ நாங்கள் செய்யவில்லை. இந்த விஷயத்தில் நாங்கள் முற்றிலும் தெளிவாக இருக்கின்றோம் என்பதில் நான் பெருமைப்படுகிறேன் என கேப்ரியல் அட்டால் கூறினார்.