ஸ்பெயினில் வெடித்த போராட்டம்

7 சித்திரை 2025 திங்கள் 08:49 | பார்வைகள் : 2565
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் மக்கள் அடர்த்தி மிகுந்த நகரங்களில் ஒன்று. வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட பல தேவைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் அங்கு குடியேறுகின்றனர்.
ஆனால் அந்த அளவுக்கு அங்கு வீடுகளின் எண்ணிக்கை இல்லை. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வீட்டு உரிமையாளர்கள், தங்கள் வீட்டின் வாடகையை உயர்த்தி வருகின்றனர்.
இதனால் வருமானத்தில் பாதி வாடகைக்கே செலவிட வேண்டியுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, வீட்டு வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன.
இந்நிலையில், தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற போராட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு பேரணியாகச் சென்றனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1