தேர்தல் களம் போல் காட்சியளிக்கும் பிரான்ஸ்!!

6 சித்திரை 2025 ஞாயிறு 11:00 | பார்வைகள் : 5857
மரீன் லு பென்னுக்கு ஆதரவாக பிரான்சில் பல பரப்புரைகள் இடம்பெற்றன. சுவரொட்டிகள் ஒட்டுவது, துண்டுப்பிரசுரம் விநியோகிப்பது என தேர்தல் பரப்புரைக் களம் போல் பிரான்ஸ் காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் தலைவர் மரீன் லு பென்னுக்கு எதிராக ஐந்து ஆண்டுகள் தகுதியின்மை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை அறிந்ததே. இதில் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை உள்ளடங்கலாகும். இதனால் அவரது அரசியல் கனவு கிட்டத்தட்ட சிதைந்துள்ளது. 2027 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
அதை அடுத்து, அவருக்கு ஆதரவாள அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்களை பேருந்து தரிப்பிடங்களிலும், மெற்றோக்களிலும், பல பொது இடங்களிலும் காணக்கூடியதாக உள்ளது. எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
Haute-Garonne, Nord, Gironde, Rhône என நாடு முழுவதும் இந்த பிரச்சாரங்கள் இடம்பெற்று வருகிறது.
தேர்தல் பிரச்சாரக் களம் போல் நாடு காட்சியளிப்பதாக அரசியல் அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025