வீட்டில் கஞ்சா தோட்டம். 2,180 செடிகளை பிடுங்கி எடுத்த காவல்துறை!!

6 சித்திரை 2025 ஞாயிறு 09:00 | பார்வைகள் : 3215
வீடொன்றில் கஞ்சா வளர்த்த ஒருவரை காவல்துறையினர் கைது செதுள்ளனர். பிரான்சின் வடகிழக்கு நகரமான Haute-Saône இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
”மின் அளவீடு பெட்டிகளில் இடம்பெறும் மோசடிகளை” கண்காணிக்கும் நோக்கோடு மின்சார ஊழியர் ஒருவர் குறித்த மாவட்டத்தில் உள்ள Gray எனும் சிறு கிராமத்துக்குச் சென்றார். அங்குள்ள வீடொன்றில் வழமைக்கு அதிகமாக மின்சாரப்பாவை இருப்பதைக் தெரிந்துகொண்டார். அது ஏன் என ஆராய்ந்தபோது வீட்டின் பின்னால் கஞ்சா தோட்டம் இருப்பதைக் கண்டுபிடித்தார். பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
200 சதுர மீற்றர் பரப்பளவில் 2,183 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு பெரும் தோட்டமாக இருப்பதை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஒருவரைக் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. கஞ்சா தோட்டத்தினை வேருடன் பிடுங்கி எடுக்கும் பணிகள் இடம்பெற்று வருகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025