பிரபல குணச்சித்திர நடிகர் ரவிக்குமார் காலமானார்
4 சித்திரை 2025 வெள்ளி 13:57 | பார்வைகள் : 3962
தமிழ் திரையுலகில் பல படங்களில் நாயகனாகவும், சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்த நடிகர் ரவிக்குமார் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75.
கேரளாவை சேர்ந்த இவர் நூற்றுக்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்ததுடன், தமிழிலும் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். குறிப்பாக ரமணா, மாறன், விசில், சிவாஜி, வியாபாரி, மலபார் போலீஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக வேளச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமார், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan