ஈஃபிள் கோபுரம் : பார்வையாளர்களின் திருப்தி தன்மை அதிகரிப்பு!!

29 சித்திரை 2025 செவ்வாய் 19:41 | பார்வைகள் : 3577
ஈஃபிள் கோபுரத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களின் அனுபவம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் முந்தைய ஆண்டுகளை விட தற்போது ஈஃபிள் கோபுரத்தை பார்வையிடு அது சிறந்த அனுபவத்தை தருவதாக தெரியவந்துள்ளது.
2019 தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரை ஈஃபிள் கோபுரத்தில் பல்வேறு திருத்தபணிகள் இடம்பெற்றிருந்தன. விசாலமான மின்தூக்கிகள் உட்பட மேலும் பல வசதிகள் உருவாக்கப்பட்டிருந்தன. அதை அடுத்து ஈஃபிள் கோபுரத்தை பார்வையிட வரும் பயணிகளில் 96% சதவீதமானவர்கள் 'திருப்த்தி' அடைவதாக தெரிவித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 11 புள்ளிகள் (2023 ஆம் ஆண்டில் 85%) அதிகமாகும்.
கிட்டத்தட்ட 14,000 பேரிடன் கருத்து கேட்கப்பட்டு இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025