சீன உணவகத்தில் தீ விபத்து - 22 பேர் உடல் கருகி உயிரிழப்பு

29 சித்திரை 2025 செவ்வாய் 14:52 | பார்வைகள் : 189
சீனாவின் லியோயிங் மாகாணம் லியாயங் நகரில் Chuniang Restaurant என்ற உணவகம் ஒன்று இயங்கி வருகிறது.
இந்த உணவகத்தில், இன்று மதியம் 12;30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்த தீயணைப்பு உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில், அங்கிருந்த 22 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், காயமடைந்துள்ள 3 பேரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து, இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. அந்த உணவகத்தில் பாரம்பரிய முறைப்படி திறந்தவெளியில் உணவு சமைக்கப்பட்டு வந்ததால், அங்கிருந்து தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டனை அளிக்கப்படும். மேலும், இதுபோன்ற விபத்துகளை தடுக்க, சீனாவில் பாதுகாப்பு விதிகளை இன்னும் மேம்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.