இலங்கையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு மே 3 நள்ளிரவுக்கு பின்னர் தடை!
29 சித்திரை 2025 செவ்வாய் 13:16 | பார்வைகள் : 2624
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் மே 3ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, மே 3ஆம் திகதி முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதி காலம் அமுலில் இருக்கும் எனவும், அக்காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

























Bons Plans
Annuaire
Scan