சூர்யா பட நடிகர் கூறிய அதிர்ச்சி தகவல்!

29 சித்திரை 2025 செவ்வாய் 15:00 | பார்வைகள் : 151
எனது சிறுநீரை பீர் குடிப்பது போல் 15 நாட்கள் குடித்தேன் என சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடித்த நடிகர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மராத்தி மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்த நடிகர் பரேஸ் ராவல் என்பவர், தமிழில் ‘சூரரை போற்று’ என்ற திரைப்படத்திலும், சில தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ’ஒரு முறை நான் காலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது என்னை பார்க்க வந்த நடிகர் அஜய் தேவ்கானின் தந்தை வீரு தேவ்கான் காலில் எப்படி காயப்பட்டது என கேட்டார். அதற்கு நான் விளக்கம் அளித்த போது, தினமும் காலையில் நீ உன்னுடைய சிறுநீரை குடி, சரியாகிவிடும்’ என்று ஐடியா கொடுத்தார்.
’சிறுநீர் குடிப்பதால் எதுவும் ஆகாது. காலை எழுந்தவுடன் சிறுநீரகத்தை குடிக்கும்படி சொன்னார். அதே நேரத்தில் மதுவையும் நிறுத்த சொல்லினார். மேலும் சிறுநீரை குடிக்கும்போது ஒரே மடக்கில் கொடுத்து விடக்கூடாது என்றும், பீர் குடிப்பது போல் அனுபவித்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.’
அவர் சொன்னபடி 15 நாட்கள் சிறுநீரை பீர் குடிப்பது குடித்து, அதன் பிறகு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, எனது காயம் குணமாகி இருந்தது. இதை பார்த்த டாக்டர்கள் ஆச்சரியமடைந்தனர்.
வழக்கமாக காலில் குணமாக இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும். ஆனால் எனது காயம் ஒன்றரை மாதத்துக்குள் குணமாகிவிட்டது என்று அவர் தெரிவித்தார். அவருடைய இந்த பேட்டி பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது,