சந்தானத்தின் அடுத்த பட இயக்குனர் இவரா?

29 சித்திரை 2025 செவ்வாய் 13:10 | பார்வைகள் : 141
சந்தானம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளுசபா என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர், ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக பெயரையும் புகழையும் பெற்றதோடு மட்டுமல்லாமல் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தார்.
அந்த வகையில் இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிம்பு, விஷால், ரவி மோகன், தனுஷ், விக்ரம் என பல டாப் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதேசமயம் இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார் சந்தானம். இது தவிர இவர், சிம்புவின் STR 49 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சந்தானத்தின் அடுத்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாகவும் இந்த படமானது காமெடி கதைக்களத்தில் உருவாக இருப்பதாகவும் லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.