தேர்தல் முன்னணியில் மரின் லூப்பன்!!

29 சித்திரை 2025 செவ்வாய் 10:50 | பார்வைகள் : 825
தேசியப் பேரணியான Rassemblement Nationalகட்சியின் மரின் லூப்பன் அண்மையில் நிதிமோசடிக்காகத் தண்டிக்கப்பட்டதுடன், ஐந்து வருடங்களிற்கு தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மேன்முறையீடு வேண்டுமென்றே ஒரு வருடத்திற்கு மேல் நீதிமன்றத்தால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் பிரபல தேர்தல் புள்ளிவிபர நிபுணர்களான ஒதெக்ஸா (ODEXA) மஸ்கெராவுடன் இணைந்து Public Sénatஎனும் பத்திரிகைக்காக ஒரு புள்ளிவிபரத்தை எடுத்துள்ளது.
2027 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலின் முதற்சுற்றில், மரின் லூப்பன் மற்றும் கட்சித் தலைவர் ஜோர்தான் பார்தெல்லலா ஆகியோர் முதலிடத்தில் அதிகப்படியான வாக்கினைப் பெறுவார்கள் என, இந்தக் கருத்துக் கணிப்புத் தெரிவித்துள்ளது.
மரின் லூப்பன் தேர்தலில் பங்கு பெறக் கூடாது என்ற தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டால், ஜோர்தான் பார்தெல்லா ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.