அமெரிக்க கடற்கரையில் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கி சூடு - 11 பேர் படுகாயம்
29 சித்திரை 2025 செவ்வாய் 08:39 | பார்வைகள் : 3263
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் மிர்ட்டல் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் மீது சந்தேக நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் பிரபல சுற்றுலா தலமான மிர்ட்டல் நகர கடற்கரையில் வார இறுதியை முன்னிட்டு அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றிருந்தனர்.
இதன் போது சந்தேக நபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த தாக்குதலின் போது பதற்றமடைந்த மக்கள் அங்கும், இங்குமாக ஓடியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 11 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
தகவலின் பேரில் அங்கு விரைந்த பொலிஸார் இதற்கு பதிலடியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan