சீரற்ற காலநிலை : கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
.jpg)
29 சித்திரை 2025 செவ்வாய் 10:34 | பார்வைகள் : 226
இன்று ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை நாட்டில் சீரற்ற காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டு, 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாவட்டங்களில் பலத்த இடி மின்னல் தாக்குதல்களும் மழையும் கொட்டித்தீர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Ain, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Alpes-Maritimes, Ardèche, Bouches-du-Rhône, Doubs, Drôme, Gard, Jura மற்றும் Vaucluse ஆகிய மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணியில் இருந்து இரவு 10 மணிவரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.