Meudon : கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் இளைஞன் மீட்பு!!

28 சித்திரை 2025 திங்கள் 20:25 | பார்வைகள் : 4666
Meudon ( Hauts-de-Seine ) நகரில் இருந்து கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞன் ஒருவனை மருத்துவக்குழுவினர் மீட்டுள்ளனர்.
நேற்று ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணி அளவில் Avenue du Général-de-Gaulle வீதியில் உள்ள வீடொன்றின் முன்பாக இளைஞன் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக தீயணைப்பு படையினர் எச்சரிக்கப்பட்டனர். விரைந்து வந்த அவர்கள் குறித்த இளைஞனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கத்தியால் தாக்கப்பட்டதில் குறித்த இளைஞன் படுகாயமடைந்துளார். அவர் 20 வயதுடையவர் எனவும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025