Paristamil Navigation Paristamil advert login

புதிய பாப்பரசர் தெரிவுக்கான உத்தியோகபூர்வ திகதி அறிவிப்பு

புதிய பாப்பரசர் தெரிவுக்கான உத்தியோகபூர்வ திகதி அறிவிப்பு

28 சித்திரை 2025 திங்கள் 16:36 | பார்வைகள் : 203


புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு (Conclave) நடைபெறும் உத்தியோகபூர்வ திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த மாநாடு மே 7 ஆம் திகதி நடைபெறும் என்று வத்திக்கான் (Vatican City) அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி பாப்பரசர் பிரான்சிஸ் இறந்ததைத் தொடர்ந்து, புதிய பாப்பரசரை தேர்தெடுப்பதற்காக கர்தினால்கள் வத்திக்கானில் கூடி வருகின்றனர்.

இந்தநிலையில், குறித்த மாநாடு சிஸ்டைன் தேவாலயத்தில் மே 7 ஆம் திகதி இரகசியமாக நடைபெறவுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டு பாப்பரசர் தேர்தலுக்கு 135 கார்டினல்கள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்