Paristamil Navigation Paristamil advert login

ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீம்

28 சித்திரை 2025 திங்கள் 19:19 | பார்வைகள் : 110


வெயில் காலம் மட்டுமல்லாமல் அனைத்து கால நிலைகளிலுமே அனைவருக்கும் அதாவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றுதான் ஐஸ்கிரீம். சிலருக்கு என்னதான் சளி, இருமல் பிரச்சனை இருந்தாலும் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடனே சரியாகிவிடும் என்றும் சொல்வார்கள்.

அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஒரு இனிப்பு உணவு பட்டியல்களின் முதன்மையான ஒன்றாக ஐஸ்கிரீம் விளங்குகிறது இதனை நாமே தயாரித்து வீட்டில் சுவைக்கும் போது அதனுடைய சுவை இன்னும் அற்புதமாக தான் இருக்கும் ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:  கான்பிளார் மாவு ரெண்டு டேபிள் ஸ்பூன், ஒரு டேபிள் ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர், பால், சர்க்கரை,வெண்ணிலா எசன்ஸ்.

செய்முறை முதலில் ஒரு பவுலில் கான்பிளார் மாவு இரண்டு டேபிள் ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் அதோட பால் சேர்த்து கட்டியாகாமல் கலக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் புல் க்ரீம் மில்க் உங்களுக்கு தேவையான அளவு எடுத்து நன்கு கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். கொதித்த உடன் அதில் கஸ்டட் பவுடர் மிக்ஸை கலந்து சிம்மில் வைத்து கலந்து விட வேண்டும் நன்கு கலந்து விட்ட உடன்  அடுப்பை அணைத்துவிட்டு வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து விட வேண்டும்.

அதன் பிறகு ஒரு காற்று புகாத டப்பாவில் கலந்து வைத்த மிக்ஸை ஆறவைத்து, சேர்த்து ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரில் மூன்று முதல் நான்கு மணி நேரம் வைக்க வேண்டும். நான்கு மணி நேரத்திற்கு பிறகு அதனை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு ஸ்மூதி போல அரைத்து எடுத்து மீண்டும் ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் சுவையான ஐஸ்கிரீம் ரெடி.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்