◉◉ விசேட செய்தி : பாரிய மின் தடை!!

28 சித்திரை 2025 திங்கள் 15:29 | பார்வைகள் : 624
ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கள் நாடுகளில் ஏற்பட்டுள்ள பாரிய மின் தடையை அடுத்து, பிரான்சின் சில பகுதிகளிலும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக பிரெஞ்சு மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஸ்பெயின், போர்துகல் போன்ற நாடுகளில் இன்று நண்பகல் முதல் மின் தடை ஏற்பட்டுள்ளது. அங்கு விமான சேவைகள், தொடருந்து போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. பாரிய காட்டுத்தீ காரணமாக மின் இணைப்புகள் தடைப்பட்டுள்ளதாக முதற்கட்டமாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மின் தடையினால் ஸ்பெயின் மற்றும் போர்த்துகலில் இயல்பு நிலை குழம்பியுள்ளது.
அதேவேளை இந்த பாதிப்பினால் பிரான்சின் “தென் பகுதிகளில்” பாரிய மின் தடை ஏற்பட்டுள்ளது. நண்பகல் 12.38 மணியில் இருந்து 1.30 மணி வரை மின் தடை ஏற்பட்டதாகவும், கிட்டத்தட்ட 400 கிலோவாட் மின்சாரம் பாயும் இணைப்புகள் தற்போது சீர் செய்யப்பட்டு மீள சேவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு பரிஸ்தமிழ் இணையத்தோடு இணைந்திருங்கள்.