சூர்யாவின் அடுத்த படத்தின் இயக்குநர் யார்?

28 சித்திரை 2025 திங்கள் 15:40 | பார்வைகள் : 3440
தனது புதிய படத்தை யார் இயக்குவார் என்பது குறித்து ‘ரெட்ரோ’ புரமோஷன் நிகழ்வில் சூர்யாவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெட்ரோ’. இந்தப் படம் வரும் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் சூர்யா. இதன் தெலுங்கு விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் தேவரகொண்டா, தயாரிப்பாளர் நாக வம்சி, இயக்குநர் வெங்கி அட்லூரி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.
இந்த நிகழ்வில் தனது அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார் சூர்யா. அதன்படி சூர்யாவின் அடுத்த படத்தை ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். நாக வம்சி தயாரிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். அது தமிழ் படமாக உருவானாலும், பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்தில் தான் படமாக்கவுள்ளதாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டார் சூர்யா
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025