பிரான்சிடம் இருந்து ரஃபேல் விமானங்களை வாங்கும் இந்தியா!!

28 சித்திரை 2025 திங்கள் 13:48 | பார்வைகள் : 451
பிரான்சிடம் இருந்து ரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் ஒன்றில் இந்தியா இன்று ஏப்ரல் 28, திங்கட்கிழமை கைச்சாத்திட்டுள்ளது.
"Rafale naval" எனும் நவீன விமானங்களையே இந்தியா வாங்க உள்ளது. இதே விமானங்களை ஏற்கனவே இந்தியா பிரான்சிடம் இருந்து வாங்கியிருந்த நிலையில், இதற்போது மேலும் 26 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
பிரான்ஸ் ஏழு நாடுகளில் 285 இதேவகை விமானங்களை இதுவரை விற்பனை செய்துள்ளது.
இதில் இந்தியா 36, எகிப்த் 55, கட்டார் 36, கிரீஸ் 24, இந்தோனேசியா 42 விமானங்களையும் அதிகபட்சமாக ஐக்கிய அமீரகம் 80 விமானங்களையும் வாங்கியுள்ளது.