யாழில் அதீத வெப்பத்தால் ஒருவர் உயிரிழப்பு
28 சித்திரை 2025 திங்கள் 09:50 | பார்வைகள் : 2319
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இணுவிலை சேர்ந்த ஆறுமுகம் யோகராசா (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார்
இணுவில் பகுதியில் வீதியோரமாக உள்ள தோட்டக்காணி ஒன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதியவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.
அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
மரண விசாரணையில் அதீத வெப்பம் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan