பள்ளிவாசல் கொலையாளி சரணடைவு!! தப்பியோட்டம் முடிவு!

28 சித்திரை 2025 திங்கள் 08:55 | பார்வைகள் : 4215
Grand-Combe (Gard) பள்ளிவாசலில் படுகொலை செய்து விட்டுத் தப்பியோடிய கொலைக் குற்றவாளியைப் பிடிக்க ஜோந்தார்மினர் பெரும் முயற்சி எடுத்திருந்தனர்.
இவனைப் பிடித்து இப்படியான இஸ்லாமிய விரோதக் கொலைகளைத் தடுக்கவேண்டும் என பரிசில் ஆர்ப்பாட்டமும் நடந்தது.
இந்தக் கொலையாளி நேற்று இரவு 23h00 மணியவில் இத்தாலிக் காவற்துறையினரிடம் சரணடைந்துள்ளான்.
இத்தாலியில் உள்ள பிஸ்தோயா நகரில் உள்ள காவல் நிலையத்திலேயே இவன் சரணடைந்துள்ளான்.
ஐரோப்பிய அளவில் இவன் மீது பிடியாணை பிரான்சினால் விடுக்கப்பட்டதால், இவர் பிரெஞ்சுக் காவற்துறையினரிடம் மிக விரைவில் ஒப்படைக்கப்படுவார்.