Paristamil Navigation Paristamil advert login

வெள்ளம் : ஐந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

வெள்ளம் : ஐந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

28 சித்திரை 2025 திங்கள் 08:00 | பார்வைகள் : 292


இன்று ஏப்ரல் 28, திங்கட்கிழமை வெள்ள அனர்த்தம் காரணமாக ஐந்து  மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை அவதானிப்பு மையமான Météo France தெரிவிக்கையில், இன்று திங்கட்கிழமை நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவும் எனவும், அதிகபட்சமாக Rouen நகரில் 24°C வரை வெப்பம் பதிவாகும் என தெரிவித்துள்ளது.

அதேவேளை, Charente, Charente-Maritime, Gironde, Landes மற்றும் Pyrénées-Atlantiques ஆகிய மாவட்டங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு அங்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் வரை வெப்பம் நிலவும் எனவும், அதன் பின்னர் இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வெள்ள அனர்த்தம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்