Paristamil Navigation Paristamil advert login

"இனவெறி மற்றும் மத அடிப்படையிலான வெறுப்புக்கு பிரான்சில் ஒருபோதும் இடமில்லை": இம்மானுவேல் மக்ரோன் கண்டனம்!

28 சித்திரை 2025 திங்கள் 00:01 | பார்வைகள் : 923


கடந்த வெள்ளிக்கிழமை, அலெஸ்_கார் மாவட்டம் (Alès-Gard) அருகே உள்ள லா கிராண்ட்கோம் (La Grand-Combe) பகுதியில் அபூபக்கர் (Aboubakar) என்பவர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார். சந்தேகநபர் இன்னும் பிடிபடவில்லை.

கொலை குறித்து இம்மானுவேல் மக்ரோன் தனது சமூக வலைத்தளமான X இல் "ஒரு இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளான். இனவெறி மற்றும் மத அடிப்படையிலான வெறுப்புக்கு பிரான்சில் ஒருபோதும் இடமில்லை. வழிபாட்டு சுதந்திரம் மீற முடியாதது" என நேற்று  கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேலும் பாதிக்கப்பட்ட  குடும்பத்தினருக்கும் பிரெஞ்சு முஸ்லிம்களுக்கும் "நாட்டின் ஆதரவை" வழங்கியதோடு, மதச்சார்பற்ற (laïcité) அரசியல் கொள்கையை மீண்டும் நினைவூட்டியுள்ளார்.

பல மத, சமூக மற்றும் அரசியல் தலைவர்கள்,பிரான்ஸ் முஸ்லிம் மதசார்ந்த கூட்டணி (CFCM), மற்றும் la Grande Mosquée de Paris ஆகியவை இந்த தாக்குதலை முஸ்லிம்களுக்கு விரோதமான பயங்கரவாதச் செயலாகக் கண்டித்து, அரசை பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்