Paristamil Navigation Paristamil advert login

43 வயதிலும் தோனி அணியை தோளில் சுமக்கிறார் - முன்னாள் வீரர் காட்டம்

43 வயதிலும் தோனி அணியை தோளில் சுமக்கிறார் -  முன்னாள் வீரர் காட்டம்

27 சித்திரை 2025 ஞாயிறு 14:42 | பார்வைகள் : 121


எம்.எஸ்.தோனி 43 வயதிலும் அணியை சிறப்பாக வழிநடத்துவதாக முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் படுமோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறது.

ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக வெளியேறிய பிறகு, எம்.எஸ்.தோனி அணித்தலைவராக CSKவை வழி நடத்தி வருகிறார்.

எனினும் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் CSK படுதோல்விகளை சந்தித்தது.

இந்த நிலையில் CSK அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, தற்போதைய அணித்தலைர் எம்.எஸ்.தோனியை பாராட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், "தோனி 43 வயதிலும் Uncapped Player ஆக களத்தில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

இந்த வயதிலும் அவர் கீப்பிங் மற்றும் அணியை வழிநடத்துவது என தனது தோளில் சுமந்து வருகிறார். ஆனால், அணியில் உள்ள மற்ற 10 வீரர்களும் என்ன செய்கிறார்கள்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.   

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்